பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டது.மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். அதில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர்; ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதேபோல் கொளப்பள்ளி, எருமாடு , சேரம்பாடி, பிதர்காடு, நெலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் சுரேஷ், பா.ஜ. மாவட்டச் செயலாளர் தீபக்ராம், வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வகுமார் பங்கேற்றனர்.