திசையன்விளை: இட்டமொழி புதுார் கோயில் கொடைவிழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இட்டமொழி புதுார் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.