சோழவந்தான்: சோழவந்தான் அருகே கண்ணுடையார்புரத்தில் புலிமேலுடைய ஐயன் என்ற கண்ணுடையார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,31 முதல்கால யாக பூஜை துவங்கி வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. இன்று காலை 2ம் கால யாகசாலை, கோ பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார் கல்யாண சுந்தரசிவம் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக கட்டப்பட்ட குதிரையில் வீற்றிருக்கும் ஐயன், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரை ஊற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐந்து ஊர் பங்காளிகள் செய்திருந்தனர்.