ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் குருபூஜை விழா அமுதுபடையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2021 04:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் 58வது ஆண்டு குருபூஜை விழா அமுதுபடையலுடன் நடந்தது.
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ருத்ர பூமியில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் ஐக்கியமானார். அவரது குருபூஜை விழா ஓங்கார ஆசிரமம் சார்பில் ஆண்டு தோறும் கொண் டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் நேற்று மதியம் 58 வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மாப்படுகை ரூத்ர பூமியில் ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகளுக்கு சர்வ ஜீவப்ரீதி பூஜை பஜனை, தியானம், அமுது படையலுடன் மகாதீபாராதனை நடந்தது. ஓங்கார ஆசிரமம் தலைமை பீடம் தவத்திரு சுவாமி ஓய்வாரநந்தா சுவாமிகள் சித்தர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதில் தவத்திரு சுவாமி கோடீஸ்வரானந்தா, முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன், முத்துக்குமரசாமி, அப்பர்சுந்தரம் உட்பட பலர் கலந்துகொ ண்டனர். ருத்ர பூமியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக காலையில் கூறைநாடு தனியார் திருமண மண்டபத்தில் விழா கொடி மற்றம் தீபம் ஏற்றப்பட் டு, சற்குரு நாமாவளி மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்யப்பட்டன. தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இரவு சற்குரு சித்தர் சுவாமிகள் மகிகை பற்றி சிறப்பு அருளுரை கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.