பதிவு செய்த நாள்
02
செப்
2021
04:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலை, 58.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துஉள்ளது.செ ங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், கி.பி., 7 – 8ம் நுாற்றா ண்டு ப ல்லவர் கால சிற்பக்கலைகளுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில், ஆன்மீக சிறப்பிடமாகவும் விளங்குகிறது. 108 வை ணவ கோவில்களில், 63வது கோவிலாக பிரசித்திபெற்றது. கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை, ஆண்டாள், ஆழ்வார்கள், ராமர், நரசிம்மர், க ருடர், ஆஞ்சநேயர் வீற்றுள்ளனர்.
பக்தர்கள், மகப்பேறு, நிலம் சார்ந்த தோஷ பரிகாரத்திற்கு வழிபடுகின்றனர். இக்கோவிலில் 1998ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 23 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் தாமதமாகிறது. 2018ல், கோவிலின் 16 கால் மண்டபத்திற்கு மட்டும், தனியார் சிலர் கும்பாபிஷேகம் நடத்தினர். தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை , 2018ல், இணை ஆணையர், தொல்லியல் அறிஞர்கள், கோவில்கள் புனரமைப்புக் குழுவினருடன் ஆய்வு செய்தது. பல நுாற்றாண்டுகள் பழமை தன்மைக்கேற்ப புதுப்பிக்க, உயர் நீதிமன்ற அங்கீகார குழுவினரிடம், அனுமதி பெறப்பட்டது. இதை யடுத்து, இத்துறையின் பொதுநல நிதி 58.10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, கோவிலை புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இக்கோவில் செயல் அலுவலர் எஸ்.சங்கர் கூறியதாவது: ஸ்தலசயனபெருமாள் கோவிலை புதுப்பிக்க, துறை அனுமதி வழங்கியுள்ளது. துறை பொதுநிதியில், முதலில், 34.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க முடிவெடுத்துள்ளோம். அடுத்து, 24 லட்சம் ரூபாய் மதிப்பில், சில திருப்பணிகளுக்கும் துறையிடம் பரிந்துரைத்துள்ளோம். துறையும் அனுமதி வழங்கும். திருப்பணிகளுக்கு பிறகு, கும்பாபிஷேகத்திற்கு முடிவெடுக்கப்படும். முன்னதாக 22 லட் சம் ரூபாயில், சுற்றுச்சுவர் அமைத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.