பதிவு செய்த நாள்
03
செப்
2021
11:09
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்திலுள்ள சிவன் கோயிலுக்கு, வ.உ.சிதம்பரனார் தானமாக டுத்த 10 ஏக்கர் நிலத்தை மீட்டு, கோயில் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டப்பிடாரத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது. மற்ற கோயிலைப்போல் இந்த கோயிலுக்கும் தானமாக கிடைத்த பல ஏக்கர் நிலம் உண்டு. ஆனால் அந்த நிலமெல்லாம் ஆக்ரமிக்கப்பட்டு விட்டதால் இப்போது வருமானமின்றி, இக் கோயில் நித்திய பூஜைக்கே திண்டாடுகிறது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மைல்கல் பதித்த வ.உ.சிதம்பரனார், இக் கோயிலுக்கு 10 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். அந்த நிலத்தைகூட பாதுகாக்க முடியாமல், அறநிலைத்துறை கைநழுவ விட்டுள்ளது. தமிழக வரலாற்றில் பல ஆலயங்களை உருவாக்கிய சேர ,சோழ, பாண்டிய, பல்லவ, விஜயநகரம் போன்ற மாமன்னர்கள், கோயில்களை உருவாக்கி மட்டும் வைக்கவில்லை. கோயில்கள் அனைத்திலும் தினசரி மூன்று கால பூஜை, திருவிழாக்கள் நடத்த வசதியாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்துள்ளனர். நாளடைவில் இந்த நிலங்கள் எல்லாம், ஆக்ரமிப்பாளர்களால் சுரண்டப்பட்டுவிட்டது. அந்த வகையில்தான் வ.உ.சி., அளித்த நிலமும் காணாமல் போய்விட்டது. அந்த நிலம், இன்று எத்தனை கை மாறி, யாரிடம் இருக்கிறது? என்பது தெரியவில்லை என்கின்றனர் பக்தர்கள்.பல லட்சம் ரூபாய் மதிப்புடைய அந்த நிலம், இன்று சிவன் கோயிலுக்கு சொந்தமானதாக இருந்திருந்தால், அந்த கோயிலில் மூன்று கால பூஜைகள் மட்டுமல்ல, பிரதோஷம் உள்ளிட்ட அத்தனை பூஜைகளும் சிறப்போடு நடந்துவரும் என்று பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர். செப். 5ம் தி, வ.உ.சி.,யின் 150 பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் தமிழக அரசு, ஓட்டப்பிடாரம் சிவன் கோயிலுக்கு வ.உ.சி., அடுத்த 10ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து, இக் கோயிலில் நித்தியகால பூஜை நடக்க ஏற்பாடு ண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.