உளுந்தூர்பேட்டை,உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார்கோவில் வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை வழிபாடு நடந்தது. மாலை 4 மணிக்கு அங்குராப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம் முதல் கால யாக பூஜையும், இன்று காலை 5 மணிக்கு நாடி சந்தானம், தத்தவார்ச்சனை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. கும்பாபிஷேக சர்வ சாதகர் துரைசாமி சிவாச்சாரியார் தலைமையில் திருவதிகை ஜெயமூர்த்தி, அர்ச்சகர் துரைசாமிஐயர் ஆகியோர் காலை 8.30 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். காலை 8.45 மணிக்கு பரிவார மூர்த்திகளுடன் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.