புதுச்சேரி-சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தியாகராஜன் (தி.மு.க) பேசியதாவது:காரைக்கால் அரசு மருத்துவமனையை முதல்வர், அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு இருதயவியல், நரம்பியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவர வேண்டும்.டி.ஆர்.பட்டினத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும். ஆன்லைன் பதிவுகளில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அனைத்து கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பஸ்களை இயக்கவேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து அளவில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.நில அளவைத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பாட்டா மாறுதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இவற்றை போக்க உரிய பணியாளர்களை நியமித்து பணிகள் வேகமாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.