விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க பிள்ளையாரிடம் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2021 04:09
தேவகோட்டை: தேவகோட்டையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பற்றி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கூட்டங்கள் நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இந்து அமைப்பினர் போலீசாரின் உத்தரவை ஏற்க மறுத்தனர். இந்நிலையில் நேற்று இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், பா.ஜ. க. ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் வீரையா ஆகியோர் தலைமையில் இந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் முன் பிள்ளையாரிடம் கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.