பதிவு செய்த நாள்
03
செப்
2021
04:09
ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டதை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 22 கோயில்களின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலம் நடத்த கொரோனா நடைமுறைகளை காட்டி தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து கோயில்களின் முன்பு முறையீடு செய்து, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 கோயில்களின் முன் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேலவாசல் முருகன் கோயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்குஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் நம்புராஜன்,ஹிந்து ஆட்டோ முன் னணி மாவட்ட செயலாளர் குமார், நகர் பொதுச் செயலாளர் கார்த்திக், மீனவர் அணி நகர் தலைவர் மாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் முன் ஹிந்து முன்னணி நகர் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாவட்ட செயலாளர் மணிமாறன், நகர் தலைவர் வீரபாகு, மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் வாசு சேகர், ஹிந்து முன்னணி நகர் துணை தலைவர் ஆதி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். தங்கச்சிமடம் முருகன் கோயில், பாம்பன் முனியசாமி கோயில், மண்டபம் சந்தன மாரியம்மன் கோயில், ரெகுநாதபுரம்முத்துநாச்சியம்மன், உச்சிப்புளி சந்தன மாரியம்மன், வண்ணாங்குண்டு விநாயகர் கோயில், ஏர்வாடி வாகையடி முனியசாமி கோயில், பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர்,வீரகாளியம்மன் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், போகலுார் ஓட்டமட காளியம்மன், கூரான் கோட்டை முனியசாமி, தேவிப்பட்டினம் திலகேஸ்வரர் கோயில், திருப்பாலைகுடி பாண்டி கோயில், திருவாடானை கட்டிவயல் சிவன் கோயில் உள்ளிட்ட 22 கோயில்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.