விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்?: அமைச்சர் விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2021 06:09
சென்னை: மத்திய உள்துறை செயலர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., காந்தி பேசும் போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்: பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தி.மு.க., அரசு அமைந்த பிறகு 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும் , மீட்கப்பட்டு அந்தந்த திருக்கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் சொத்து மதிப்பு ரூ.641 கோடி. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.