நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்தகன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கரகம் வீதியுலா நடந்தது. பின், சாகைவார்த்தல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் அருள்பாலித்தனர். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.