பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்ற பழமொழி உண்டு. இதற்கு மங்களகரமாக ஆரம்பிக்க விநாயகர் வழிபாடும், மங்கள ஆரத்தி எடுத்து அதை வெற்றிகரமாக முடிக்க அனுமன் வழிபாடும் சிறந்தது என பொருள். இதன் அடிப்படையில், மதுரை ஆவின் நகர் செல்வவிநாயகர் கோவிலில் விநாயகர் சன்னிதியை முதலில் அமைத்து, கோடீஸ்வரர் (சிவன்), மகா லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களை தரிசித்து விட்டு, அனுமன் சன்னிதியுடன் முடிக்கும் வகையில் கோவில் அமைத்துள்ளனர். இத்தல விநாயகர், 16 வகையான செல்வ வளங்களை அருளும் விதத்தில் வலஞ்சுழி விநாயகராக உள்ளதால் செல்வவிநாயகர் என பெயர் பெற்றுள்ளார். இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ. துõரத்தில் உள்ள கோமதிபுரம் ஆவின்நகரில் கோவில். அண்ணாநகர் சுகுணா ஸ்டோரிலிருந்தும் செல்லலாம்.