பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையில் 64 புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தப்பகுதிகளில்தான் சீனிவாச பத்மாவதி கல்யாணத்தில் பங்கேற்ற விருந்தினருக்குத் தேவையான உணவு வகைகள் தயாரானதாக திருமலை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகில்உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் சோறும், பாப விநாசத்தில் சாம்பாரும், ஆகாசகங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தங்களில் சித்ரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல், பொரியல் வகைகளும் தயாராயின. இவை தவிர, கபில, பாண்டவ, பல்குண, சக்கர, பத்மஸரோவம் தீர்த்தங்களிலும் பல்வகை உணவுகள் தயார் செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.