பதிவு செய்த நாள்
06
செப்
2021
06:09
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு,11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ அளவிலான துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில், ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று(06ம் தேதி ) ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 504 கிலோ துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில், கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் குறைந்தளவிலான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.