கூழமந்தல் விநாயகர் கோவிலுக்கு விஜயேந்திரர் திருகுடை காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 06:09
காஞ்சிபுரம் : கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலுக்கு, காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இருதிருக்குடைகள் காணிக்கையாக வழங்கினார். காஞ்சிபுரம் அடுத்த, கூழமந்தல் பகுதியில் ஏரிக்கரை அருகில் நட்சத்திரவிருட்ச விநாயகர் கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலில், வரும்10ம் தேதி நடைபெறும்விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக ஓரிக்கை மஹாசுவாமிகள் மணிமண்டபத்தில் வைத்து விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள், இருதிருக்குடைகள் கோவில் நிர்வாகிகளிடம் காணிக்கையாக வழங்கினார்.முன்னதாக பக்தர்கள் கோ பூஜை செய்தனர். பின், திருக்குடைகளுடன் மணி மண்டபத்தை சுற்றி வந்து கூழமந்தல் கொண்டு சென்றனர்.