உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் புத்தாளக்கண்மாயோரத்தில் உள்ள சிவகாளி அம்மனுக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜகர் முருகன் பூஜை செய்திருந்தார்.