பதிவு செய்த நாள்
09
செப்
2021
08:09
கடலுார்: கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.பிரசித்திப் பெற்ற கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணா ஹீதி நடந்தது. நேற்று காலை யாக சாலை பூஜைகள், மூல மந்திர ேஹாமங்கள் , மகா பூர்ணாஹீதி , யாத்ராதானம், கடம் புறப்பாடு, பாலாலய பிரதிஷ்டை, தீபாராதனை நடந்தது. கோவில் தக்கார் சுபத்ரா, செயல் அலுவலர் ரமேஷ் பாபு, தலைமை எழுத்தர் ஆழ்வார் முன்னிலையில் பூஜைகள் நடந்தது. திருப்பணிக்குழு கவுரவத் தலைவர்கள் முத்துக்குமரனார், லட்சுமி நாராயணன், தலைவர் கணேசன், பொதுச் செயலர் உதயவேலு, உதய பாஸ்கர், துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சுடலை மணி, சதீஷ், அரங்கநாதன் பங்கேற்றனர்.