பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2021 08:09
திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா நாளை நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்துநாள் உற்ஸவம் செப்.1ல் துவங்கியது. கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி கோயிலினுள் மட்டும் உற்ஸவம் நடைபெற்று வருகிறது. காலை, மாலை உற்ஸவர் எழுந்தருளி பிரகாரம் வலம் வருதல் நடந்தது. 6ம் திருநாளை முன்னிட்டு கஜமுகசூரசம்ஹாரமும் கோயில் வளாகத்தினுள் நடத்தப்பட்டது. 9ம் திருநாளை முன்னிட்டு இன்று தேரோட்டம், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறவில்லை. நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் தீர்த்தவாரி,மதியம் மூலவருக்கு முக்கூறுணி மோதகம் படைத்தல்,இரவில் ஐம்பெரும் கடவுளர் எழுந்தருளலும் நடைபெறும். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.