பதிவு செய்த நாள்
09
செப்
2021
03:09
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிசேகம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்தது. கண்டரமாணிக்கம் அருகில் விருசுழியாற்றில் அமைந்துள்ள இக்கோயில் பாடுவார் முத்தப்பரால் பாடப்பெற்றது.மருது சகோதரர்கள் வழிபட்ட தலமாகும். வெண்குஷ்ட நோய்க்கு பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர். இக்கோயிலுக்கு சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிசேகம் நடந்தது. தற்போது மீண்டும் புனரமைப்பு,பீடம்,மண்டபம் திருப்பணிகள் நடந்தது. மருதம் பிள்ளையார், வனதுர்க்கை, மருதுசுவாமி, பாலமுருகன்,முனீஸ்வரர் சன்னதிகளுக்கு திருப்பணி நடந்தது. கும்பபிேஷகத்தை முன்னிட்டு செப்.,7 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. இரண்டாம் நாளில் 2,3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, ெட்சுமி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி காலை 11:20 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தத. சாமிநாதன்,தண்டாயுதபாணி குருக்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.ஏற்பாட்டினை நாட்டார்,நகரத்தார்,என்.பத்மநாபன் சேர்வை, ராம.கனகுகருப்பையா செட்டியார்,வாவாசித் தேவர் வகையறா செய்தனர். சுற்று வட்டாரக் கிராமத்தினர் பலரும் கும்பாபிேஷகத்தை தரிசித்தனர்.