நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டு திருவிழா கொடியிறக்கத்துடன நிறைவு பெற்றது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில் கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆக 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்8 ம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவடையும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா பக்தர்களின்றி நடைபெறுகிறது. நேற்று இரவு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் நன்றி அறிவிப்புடன் கொடியிறக்கப்பட்டது.