ஏரல்: ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற கோயிலான ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நிகழ்ச்சிகள் கடந்த 5ம்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது . கொடைவிழா அன்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் அம்மனுக்கு மகா அபிஷேகமும், மஞ்சள் நீராடுதல், மதியம் தீபாராதனை நடந்தது . தொடர்ந்து அம்மன் கேடய சப்பரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பம்எடுத்து நகர்வலம்வருதல், இரவு 10 மணிக்கு புஷ்பஅலங்கார தீபாராதனை யும், அதனைத்தொடர்ந்து பிரம்மசக்தி அம்மன் கோயிலிருந்து அம்மன் புறப்பட்டு பொன்சப்பரத்திற்கு வருதல், பின்னர்அம்மன் பொன்சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளவாத்தியங்களுடன் வாணவேடிக்கை கரகாட்டத்துடன் நகர்வலம்வலம்செல்லுதல் முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது.