Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலையூர் லட்சுமி நாராயண பெருமாள் ... திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா திருப்பரங்குன்றத்தில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப்.16ல் திறப்பு
எழுத்தின் அளவு:
புரட்டாசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப்.16ல் திறப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2021
02:09

 திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். வருகிற 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி பூஜை மற்றும் திருவோண சிறப்பு பூஜையில், நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிறைவு நாளில், படி பூஜை, புஷ்பாபிஷேகத்துடன் கடந்த 23ம் தேதி நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். நாள்தோறும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமம், செஞ்சுலட்சுமி நகரில், பக்தர்கள் பங்களிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar