பாலையூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2021 12:09
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே பாலையூரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமாச்சார்யாள் சுவாமிகள் அனு கிரகத்துடன் வரும் 16ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 14ம் தேதி ஆச்சாரிய அழைப்புடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகிறது. தொடர்ந்து 16ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை விசேஷ பூஜைகள் பூர்ணாகுதி நடைபெற்று கோவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் மூலவர் மகா அபிஷேகம் நடைபெறுகிறது தொடர்ந்து விசேஷ தீபாராதனை வேத விண்ணப்பம் சாற்றுமுறை ஆகியவையும் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது கோவில் கும்பாபிஷேகத்தை ஆலய அர்ச்சகர் கோகுலகிருஷ்ணன் பட்டாச்சாரியார் சர்வசாதகம் கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார் சர்வசாதகம் சித்தமல்லி ஸ்ரீராம் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் கோவில் ஆய்வாளர் ஹரி சங்கர் ஆகியோர் கிராம மக்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.