பதிவு செய்த நாள்
11
செப்
2021
06:09
கடலுார்: கடலுார் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியொட்டி சிறப்பு பூஜைகள் பக்தர்களின்றி நடந்தது. விநாயகர் சதுர்த்தியொட்டி கடலுார் பாடலீஸ்வரர், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் வேத விநாயகர், வண்டிப்பாளையம் சுப்ரமணியர் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. பொது மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரண்டு காலம் யாக சாலை பூஜைகளும் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடந்தது. விநாயகருக்கு சங்காபிஷேகம் நடந்தது. காலையில் வெள்ளிகாப்பு, மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தார். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட பலர் தரிசனம் செய்தனர். ரத்தினம் தெரு விநாயகர், அருள்தரும் அய்யப்பன் கோவில் உட்பட பல கோவில்களில் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடந்தது.நடுவீரப்பட்டுநடுவீரப்பட்டு கைலாசநாதர் மற்றும் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள், சி.என்.பாளையம் மலையாண்டவர், சொக்கநாதர், விநாயகர் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுவாமி ஆலயத்தினுள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.