பதிவு செய்த நாள்
14
செப்
2021
02:09
வீரபாண்டி: வளர்பிறை சஷ்டியான நேற்று, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஆவணி மாத வளர்பிறை சஷ்டியான நேற்று காலை, மூலவர் கந்தசாமி மற்றும் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமி ஆகியோருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, மூலவர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி கவசத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே போல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யருக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டது. ஆட்டையாம்பட்டி வேலநத்தம் முத்துக்குமார சுவாமி, கடைவீதி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.