ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்க தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
2001ல் ராமேஸ்வரம் கோயிலில் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில்6 குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் தேர் இழுத்தனர். 2006ல் சக்கரம் பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2021 மார்ச்சில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் தங்க ரத ஓட்டம் நடந்தது.
அதன்பின் தேரோட்டம் நடக்காத நிலையில் தற்போது தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. தேருக்கான தங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாலீஷ் செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறியது: தேர் கருப்பு நிறமாகி மாறி உள்ளதால், கோயிலின் புனிதம் சீரழிகிறது. இதில் உண்மையை பக்தர்களுக்கு தெளிவுபடுத்தி, தேரை புதுப்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.