பதிவு செய்த நாள்
15
செப்
2021
10:09
புதுச்சேரி : காலாப்பட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 21 அடி உயர சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காலாப்பட்டில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது.கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காலாப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் சிறப்புரை ஆற்றினார்.பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தாமோதரன், ராமலிங்கம், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை சாந்தகுமாரி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.பேரவை கவுரவ தலைவர் மணி, தலைவர் குப்பன், பொதுச் செயலாளர் கருணாகரன், முன்னாள் மாநில துணைத் தலைவர் பரந்தாமன், ஜெயந்தி மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேரவை நிர்வாகி கண்ணன் செய்தார்.