Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: புரட்டாசி ராசிபலன் மேஷம்: புரட்டாசி ராசிபலன் மிதுனம் : புரட்டாசி ராசிபலன் மிதுனம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை)
ரிஷபம் : புரட்டாசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
15:37


கார்த்திகை - 2, 3, 4:
எடுத்த கொள்கையில் மாறாமல் இருக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நெடுங்காலமாக தடைபட்டிருந்த சுபவிஷயயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது.  பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

பரிகாரம்: லட்சுமி  நரஸிம்மரை தினமும் விளக்கு ஏற்றி வணங்குங்கள்.
சந்திராஷ்டமம்: அக். 11, 12
அதிர்ஷ்ட நாள்: அக். 3

ரோகிணி:
அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். தடைபட்ட செயல்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான செயல்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம்.

பரிகாரம்: ஸ்ரீமகாலட்சுமி காயத்ரி சொல்லி தினமும் லட்சுமி யை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 12, 13
அதிர்ஷ்ட நாள்: அக். 4

மிருகசீரிடம் - 1, 2:
வேகத்திற்கு பெயர் போன மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய செயல்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணியில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 13, 14
அதிர்ஷ்ட நாள்: அக். 4

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை) »
temple
அசுவினி:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, ,3 ,4: மனசாட்சியுடன் செயல்படும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: எடுத்த செயல்களை திட்டமிட்டு செய்யும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வீடு - ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: முயற்சிகளில் பின்வாங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல ... மேலும்
 
temple
மகம்: அளவான பேச்சும், அதிக செயல்திறனும் காட்டும் மக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.