Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ரிஷபம் : புரட்டாசி ராசிபலன் ரிஷபம் : புரட்டாசி ராசிபலன் கடகம் : புரட்டாசி ராசிபலன் கடகம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை)
மிதுனம் : புரட்டாசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
15:38

மிருகசீரிஷம் - 3, 4:
முயற்சிகளில் தொய்வில்லாமல் உழைக்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபவிஷயய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்கள் மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.  தந்தை, தாய் இவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை பூஜித்து வர நன்மையுண்டு. கோவில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். நன்மைகள் பயக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 13, 14
அதிர்ஷ்ட நாள்: அக். 5, 6

திருவாதிரை:
உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திராதிபதி ராகுவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். பணியில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்.கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் மல்லிகையை அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப் 17, அக். 14, 15
அதிர்ஷ்ட நாள்: அக். 6, 7

புனர்பூசம் - 1, 2, 3:
சொல்லாற்றல் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவர். இந்த மாதம் நட்சத்திராதிபதி குருவின் சஞ்சாரத்தாலும் பார்வையாலும் எடுத்த காரியத்தை சாமர்த்தியமாக பேசி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சோதனைகள் வெற்றியாக மாறும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் சிவனுக்கு வில்வம் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம்: செப் 18, அக். 15, 16
அதிர்ஷ்ட நாள்: அக். 6, 7

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை) »
temple
அசுவினி:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, ,3 ,4: மனசாட்சியுடன் செயல்படும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: எடுத்த செயல்களை திட்டமிட்டு செய்யும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வீடு - ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: முயற்சிகளில் பின்வாங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல ... மேலும்
 
temple
மகம்: அளவான பேச்சும், அதிக செயல்திறனும் காட்டும் மக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.