Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மீனம் : ஆவணி ராசிபலன் மீனம் : ஆவணி ராசிபலன் ரிஷபம் : புரட்டாசி ராசிபலன் ரிஷபம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை)
மேஷம்: புரட்டாசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
15:36

அசுவினி:
அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திராதிபதி கேது சஞ்சாரத்தால் எதிலும் லாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். பணியில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். பெண்கள் மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினர் வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அரசியல்துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 9, 10
அதிர்ஷ்ட நாள்: அக். 1

பரணி:
எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத பரணி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் செயல்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணியில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். நட்சத்திரநாதன் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் அலைச்சல் இருக்கும். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை மல்லிகையால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 10, 11
அதிர்ஷ்ட நாள்: அக். 2

கிருத்திகை - 1:
தனது தந்தையாரைப் போலவே எண்ணம் புத்தி செயலில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். இந்த மாதம் நட்சத்திராதிபதி சூரியன் பலமாக காணப்படுவதால் சொல்லிலும் செயலிலும் அதிக வேகம் இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் தடைபட்ட செயல்களில் தடை நீங்கி சாதகமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.
சந்திராஷ்டமம்: அக். 11, 12
அதிர்ஷ்ட நாள்: அக். 2

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை) »
temple
அசுவினி:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, ,3 ,4: மனசாட்சியுடன் செயல்படும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: எடுத்த செயல்களை திட்டமிட்டு செய்யும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வீடு - ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: முயற்சிகளில் பின்வாங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல ... மேலும்
 
temple
மகம்: அளவான பேச்சும், அதிக செயல்திறனும் காட்டும் மக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.