இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கையாக ரூ.14 லட்சம் வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2012 10:06
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், காணிக்கையாக ரூ.14 லட்சம் கிடைத்தது. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள், மடப்புரம் கோயில் உதவி ஆணையாளர் கார்த்திக்,கோயில் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம், கோயில் உதவி ஆணையாளர் மாரிமுத்து,பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டன. காணிக்கை பொருட்களை,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், கோயில் பணியாளர்கள் பிரித்து கணக்கிட்டனர். காணிக்கையாக ரூ.14 லட்சத்து 13 ஆயிரத்து 62 , 62 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி கிடைத்து.