ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2012 11:06
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் சுயம்பு லிங்கத்தின் மீது தேனபிஷேகம் செய்யும் போது ஒளி வடிவில் சிவனை தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும். இக்கோவில் பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் பலி பீடம் அருகே உள்ள துஜ ஸ்தம்பத்தில் கொடியேற்றி திருவிழா துவக்கி வைக்கப்பட்டது. செயல் அலுவலர் வெங்கடேŒன், பெரியபால மூப்பர் வகையறாவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு நந்தி வாகனத்தில் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 9 நாட்கள் விழா நடக்கிறது. ஜூலை 2ம் தேதி முக்கிய திருவிழாவான தேர் உற்சவம் நடக்கிறது.