கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து வீதியில் நடராஜர் சுவாமி கோட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.இதில், தமிழ் தேவார வழிபாட்டு குழுவினர் திருமுறை பாடல்களை பாடினர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்திருந்தார். உபயதாரர் பழமலை, ஓதுவார் பழனியாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.