திருச்செந்துார் கோயிலில் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2021 11:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று (செப். 23) முதல் அதிகாலை5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இதுவரை பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று முதல் (23ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டதும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்நது இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் அரசின் அறிவிப்புபடி கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள்சு வாமி தரிசனத்ததிற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தகவல் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.