பதிவு செய்த நாள்
23
செப்
2021
04:09
திருப்பூர்: திருப்பூர் அருகே, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.67 ஏக்கர் கோவில் நிலம் நேற்று மீட்கப்பட்டது. திருப்பூரை அடுத்துள்ள நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி விசாலாட்சியம்மன் கோவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 148.38 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆக்கிரமிப்பில் இருந்த, கோவில் நிலம், படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நல்லுார் கிராமத்தில் 1.67 ஏக்கர் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இணை கமிஷனர் நடராஜன் உத்தரவுப்படி, திருப்பூர் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, நேற்று நிலத்தை மீட்டு, தகவல் பலகை வைத்தது. அதிகாரிகள் கூறுகையில், கோவில் நிலத்தை தங்கள் வசம் வைத்துள்ள நபர்கள், தாங்களாக முன்வந்து, நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றனர்.