உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க., உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஒன்பது ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஆட்களை நிறுத்தியுள்ளது.இக்கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கும் முன் மருத்துவான்பாடியில் உள்ள 21 அடி உயர வீரஆஞ்சநேயர் சிலைக்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை போட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரத்திற்காக அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் போஸ்டர்களை, ஆஞ்சநேயர் சிலையின் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.எந்த கட்சி வேணாலும் தோற்கட்டும், நாங்க மட்டும் எப்படியாவது ஜெயித்துவிட அருள்புரிய வேண்டும் ஆஞ்சநேயா என வழிபாடு செய்து, பிரசாரத்தை துவக்கியுள்ளனர். மேல்சித்தமல்லி, நாகமேடு, சித்தமல்லி, மாகரயான்மேடு உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.