வத்திராயிருப்பு முத்தாலம்மன் தேர்த்திருவிழா ரத்து: பொங்கல் வைக்கவும் அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 10:09
வத்திராயிருப்பு: தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், மாவட்ட அரசு நிர்வாகத்தின் அறிவுரையின்படியும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில், இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் தேர்த்திருவிழா உற்சவம் நடைபெறாது எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், இன்று வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் பொங்கல் சாத்தும் வைபவம், அக்டோபர் 5 அன்று மது பொங்கல் வைபவம், அக்டோபர் 12 அன்று முத்தாலம்மன் கோவில் பொங்கல் வைக்கும் வைபவங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் கோவில் வளாகத்திற்குள் நடக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.