ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயில் பராமரிப்பு பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஓங்கி உயர்ந்த மருத மரங்களுடன் இயற்கையான சூழலில் உள்ளது. மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் சுனை நீர் இக்கோயிலில் தனிச்சிறப்பு. சுனை நீரில் குளித்து வேலப்பரை வழிபடுவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சித்திரை முதல் தேதி, அதனை தொடர்ந்து வரும் நான்கு வாரமும் குறிப்பிட்ட நாளில் விழா நடைபெறும்.மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாளில் அதிக பக்தர்கள் வந்து செல்வர். பல்வேறு சிறப்புகள் கொண்ட கோயிலுக்கு 2004 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். 17 ஆண்டுகளைக்கடந்தும் கும்பாபிஷேகம் துவக்கத்திற்கான நடவடிக்கை இல்லை