கோவில்பட்டி: கோவில்பட்டி புற்று கோயிலில் தேய்பிறை சஷ்டி கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது. கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மன் புற்று கோயிலில் தேய்பிறை சஷ்டி கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, கணபதி பூஜையுடன் துவங்கி ஸ்தாபன கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், மழை வேண்டி வருண ஜெபம், தீபாராதனை யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் மூலமந்திர ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுப்பிரமணி அர்ச்சகர் செய்தார். கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.