பதிவு செய்த நாள்
30
செப்
2021
05:09
மைசூரு: மைசூரு தசரா விழாவை ஒட்டி, அக்டோபர் மாதத்தில், ஐந்து நாட்கள் அரண்மனைக்கு செல்ல பார்வையாளர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழா , அக்டோபர் 7ல் துவங்கி, 15ல் நிறைவு பெறுகிறது. தசரா விழாவின் போது மன்னர் வம்சத்தின் சார்பில் பாரம்பரிய சடங்குகள் செய்வது வழக்கம். அந்த வேளையில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. வெறும் மன்னர் வம்சத்தினர் மற்றும் அவர்களுக்கு சேவை புரிந்து வந்தவர்கள் மட்டுமே இருப்பர். இந்நிலையில், மன்னர் வம்சத்தின் யதுவீர், தனியார் தர்பார் நடத்தும் தங்க சிம்மாசனம் நாளை ஜோடிக்கப்படுகிறது. இதனால், நாளை காலை 10:00 மணியிலிருந்து, பகல் 1:00 மணி வரை அரண்மனைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று, தசரா விழா துவங்கும் அக்டோபர், 7ல் மன்னர் வம்சத்தினர் சிம்மாசனத்துக்கு பூஜை செய்வதால் , அன்றைய தினம் கா லை 10:00 மணியிலிருந்து, மதியம் 2:00 மணி. ஆயுத பூஜை நாளான அக்டோபர் 14 ல், காலை 10:00 மணியிலிருந்து, மதியம் 2:00 மணி வரையிலும்; விஜயதசமியை ஒட்டி, 15ல், நாள் முழுதும். சிம்மாசனம் பிரிக்கும் பணியால், 30ல், காலை 10:00 மணியிலிருந்து, பகல் 1:00 மணி வரையிலும், அரண்மனைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.