சென்னிமலை முருகன் கோவில் கோசாலை எருவுக்கு கிராக்கி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2021 04:10
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், கோசாலை எரு, 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் விடும் மாடு, எருதுகள், சென்னிமலை முருகப்பெருமானுக்கு தினமும் திருமஞ்சனம் கொண்டு செல்லும் காளைகள் என, 25க்கும் மேற்பட்ட மாடுகள், அடிவாரத்தில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சாண எருவுக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில் நான்கு பேர் கலந்து கொண்டனர். இரண்டு பேர் கடும் போட்டியிட்டனர். இதில், 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.