காஞ்சிபுரம்-கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களில் நவராத்திரி விழா, வெள்ளிக்கிழமைகளில் சுவாமியை தரிசிக்க சிரமப்படுவதாக, பக்தர்கள் கூறுகின்றனர்.இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறியதாவது: கொரோனா தொற்று இருந்தபோது இந்த நடைமுறை வரவேற்கப்பட்டது. தற்போது அரசு சொல்லும் அளவுக்கு தொற்று இல்லை. மேலும் தொற்று இருப்பது உண்மையானால், சினிமா தியேட்டர்கள் இயங்க, அரசு ஏன் அனுமதி கொடுத்தது.ஏசி அறையில் அருகில் இருந்து சினிமா பார்த்தால், கொரோனா தொற்று ஏற்படாதா. கோவிலுக்கு செல்வோருக்கு மட்டும் தொற்று ஏற்படுமா?நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன், கோவிலில் உள் புறப்பாடு எழுந்தருள்வார். தவிர கச்சேரி நடக்கும். இவற்றை பக்தர்கள் பார்த்து ரசிப்பர். இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.பிரச்னை உள்ள மனிதர்கள் மன நிம்மதிக்காக கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த நிம்மதியையும் அரசு கெடுக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.