பதிவு செய்த நாள்
10
அக்
2021
02:10
புதுச்சேரி : தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று மூன்றாம் நாளாக நடந்த சத சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் கடந்த 7ம் தேதி முதல், சத சண்டி ஹோமம் நடத்தி வருகிறது. மூன்றாம் நாளான நேற்று அம்மன் இந்திராணி அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை 7:00 மணிக்கு கோபூஜையுடன் துவங்கி, சத சண்டி ஹோமம் நடைபெற்றது. சுமங்கலி, கன்யா, வடு, தம்பதி பூஜைகளுடன், மதியம் 1.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.
யாகத்தை சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலோடு அசோக் சாஸ்திரி நடத்தினார்.யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக்கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது.இப்பூஜைகள் அனைத்தும் வரும் 15ம் தேதி வரை தினசரி நடைபெறும் என சமிதியின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சீதாராமன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.