பீதர்: பீதர் ஹும்னாபாத் அருகே உள்ள ஜல சங்வி கிராமத்தில் புரானகல்லேஸ்வரா கோவில் உள்ளது. 900 ஆண்டுக்கு முன்பு, கல்யாண சாளுக்கிய மன்னரான 6ம் விக்கிரமாதித்யனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பாண்டவர்கள், தங்கள் வனவாச காலத்தில் இங்கு காலம் கழித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள சிற்பங்கள், காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது. கோவில் சுவர்களில் நாட்டிய மங்கைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்கள், ஹாசன் பேலுாரில் உள்ளவை போல் உள்ளது. இந்த கோவில் சிற்பங்களை முன்மாதிரியாக கொண்டு பேலுார், ஹளேபீடு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில், இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.