பதிவு செய்த நாள்
11
அக்
2021
06:10
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அடுத்த ஓலப் பாளையத்தில் ஸ்ரீ வானர ராஜசிம்மன் திருக்கோவில் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் அருளாசியுடன் ஸ்ரீ முரளி ஜி ராமாயண சொற்பொழிவு நடந்தது.
முன்னதாக வியாழக்கிழமை அன்று தொடங்கி ராம ஜனனம், சீதா கல்யாணம், கௌசல்யா மங்களாசாசனம், குகன் ஸக்கியம் நேற்று சொற்பொழிவு நடந்தது. நேற்றைய சொற்பொழிவில் ராமன் சீதையுடன் லட்சுமணன், மந்திரி சுமத்ரா உடன் காட்டிற்கு சென்றது, தந்தை தசரதனிடம்,மக்களிடமிருந்து விடைபெற்றது. காட்டில் குகனை சந்தித்தது நாம் ஐவராணோம் என ராமன் கூறியது குறித்து ராமாயணத்தில் சொற்பொழிவாற்றினார். நான் என்ற அகங்காரம், பதவி, பணம் , பகட்டு , எதுவும் இறைவனை அடைய முடியாது. கடவுளின் முன்பு அனைவரும் சமம், மனமொன்றி கடவுளை வழிபடுவதன் மூலம் பக்தி ஒன்றே இறைவனை அடையலாம் என கூறினார். துலாபாரத்தில் கிருஷ்ணணுக்கு ஈடாக வைரம் , வைடூரியம்,பணம் கோடி கோடியாக வைத்தும் தட்டு சமமாகவில்லை. மனைவி ஒரு துளசியை வைத்ததும் தட்டு சமனாகி நின்றது. பக்தி ஒன்றே இறைவனை காண ஒரே வழி, நாம் ஒரு படி இறங்கினால் தெய்வம் ஒருபடி இறங்கி நமக்கு வேண்டியதை செய்யும் என பேசினார். இந் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் சிறப்பாக செய்திருந்தார்.