திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பஸ்வாமி பக்கில் ஆண்டாள் மாலை சூடிக்கொண்டு எழுந்தருளினார். பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தை அரக்கர்களுக்கு கிடைக்க விடாமல் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்க மஹாவிஷ்ணு கொண்ட அவதாரம் மோகினி அவதாரம். தாயாரின் உருவத்தில் மலையப்பஸ்வாமி பிரம்மோற்சவத்தின் 5ம் நாள்காலை ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி பக்கில் எழுந்தருளினார். மாலையில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேனையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.