திருப்பரங்குன்றம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மற்ற நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
இந்த மூன்று நாட்களிலும் கோயில்களுக்குள் கால பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடக்கின்றன. பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்கின்றனர். இந்த நாட்களில் முகூர்த்த தினம்வந்தால் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று நாள் தடை காரணமாக திங்கள் முதல் வியாழன் வரை கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மூலஸ்தானத்தில் விரைந்து தரிசனம் செய்து செல்லும்படி பக்தர்களை வலியுறுத்தும்போது கோயில் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அரசு அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க முன்வர வேண்டும்.