பதிவு செய்த நாள்
12
அக்
2021
03:10
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நவராத்திரி 5ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நவராத்தியையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வருகிறது.
நேற்று 5ம் நாள் உற்சவத்தையொட்டி, மாலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்குப்பின் பெருமாள், தாயார் உள்பிரகாரம் வலம் வரச் செய்து, சாற்றுமுறை சேவை ஆராதனை நடந்தது.இதேபோன்று காந்திரோடு சித்தி விநாயகர் கோவில், முத்துமாரியம்மன், புத்து மாரியம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கமலா நேரு தெரு காமாட்சி அம்மன், அண்ணாநகர் விஷ்ணுதுர்கை அம்மன், முடியனுார் அருணாசலேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.