பதிவு செய்த நாள்
12
அக்
2021
03:10
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின், ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று, உற்சவர் துர்கையம்மன், சண்டிகாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்திரமேரூரில் வடவாயிற்செல்வி என அழைக்கப்படும் பழமையான துர்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 24ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 6ல் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில், உற்சவர் துர்க்கையம்மன் மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, வராஹி, மஹாலட்சுமி, மோஹினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று, சண் டிகாதேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார். உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.